பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

வரை போருக்குச் செல்லக்கடமைப்பட்டவர். இங்கு ஒரு செய்தியைக் குறிப்பிட்டால் வியக்காமல் இருக்க முடியாது. அஃதாவது போருக்குச் செல்பவர் தாமே ஆயுதங்களையும் உணவு வசதிகளையும் தயாரித்துக் கொண்டு போவதாகும். அடிக்கடி போர் நிகழ்ந்ததால் பல எதினிய மக்கள் உயிர் இமுக்கவும் நேர்ந்தது. ஒரே ஆண்டில் பல எதினிய மக்கள் போரின் நிமித்தம் உயிரிழந்திருக்கிறார்கள்.

தரைப்படை

நிலப் போரில் அத்துணைச் சீரிய பெருமை படைத்தவர் அல்லர் ஏதென்ஸ் நகரமக்கள். அவர் நல்ல அரண் படைத்தவர். மேலும் அவர்கள் கடற் போரில் நிகரற்று இருந்தமையால், பகைவர்கட்கு அஞ்சவேண்டு மென்னும் நியதி ஒன்றும் இல்லாதவராய் இலங்கினர். பிலோபோனேஷியன் சண்டையில்கூட எல்லா எதினியக் குடிமக்களும் சண்டைக் குப்பயந்து வெளியூர்களுக்குச் செல்லாமல் உள்ளுரிலேயே மறைந்து தம்முயிரைப் பலவாறு காப்பாற்றிக் கொண்டனர். இதனால் ஸ்பார்ட்டா படைவீரர்கள் விளநிலங்களையும் படைகளையுமட்டும் அழிக்கலாயினர். ஏதென்ஸ் நகரத்தவர் ஆட்சித்திறனே கடற் போர்த்திறமையில் அடங்கியிருந்தமையால் கடற் போர்க்கலத்தை நன்கு அமைப்பதிலும் கடற் போர் வீரரை நன்கு பயிற்றுவிப்பதிலும், கண்ணுங் கருத்துமாய் இருந்தனர் எனலாம்.