பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


6. பழக்க வழக்கங்கள்

ஒரு நாட்டு மக்களின் நடையுடை பாவனைகளும் வாழ்க்கையும் அந்நாட்டின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவையாகும். ஏதென்ஸ் நகரின் ஒரு பகுதி அட்டிக்கா (Attica) என்பது. இது வெம்மை மிகுந்த நாடாதலின், இந்நிலப் பரப்பை வறண்ட பிரதேசம் எனவும் கூறலாம். ஆனால், மாரிக் காலத்தில் மழையும் மிகுதி. கோடைக்காலத்திலும் சிற்சில சமயங்களில் பலத்த மழையுண்டு. எனினும் பகற்போது வெம்மை மிகுந்து காணப்படும். வானம் மாசு மறு இன்றி விளங்கும். காலை நேரத்திலும் பரிதி தன் வெம்மை ஒளியை வீசி விளங்குவான். இங்கு இயற்கை அழகு இயம்பவொண்ணா நிலையில் திகழும். பறவைகளின் ஒலி காதைத் துளைக்கும். மாலை நேரத்தில் பரிதியங் கடவுள் தன் பொன் மயமான கதிர்களை வீசிக் கொண்டு விளங்கும் தோற்றம் காணக்கவினுடையதாக இருக்கும். ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறன்றோ’ அவன் ?

உடைகள்

ஏதென்ஸ் நகர மக்கள் உடுத்திய உடைகள் கோடைக்காலம், மாரிக்காலம் ஆகிய இருகாலங்கட்கும் ஒத்துவரக் கூடியனவாக இருந்தன. இவர்கள் நீண்ட அங்கியை அணிந்திருந்தனர். நாம் பொத்தானை மார்புப் பக்கம் பிணித்துக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் தோள்பக்கம் முடியிட்டுக்கொள்வர். இவ்வாடை அணிதலின் தோற்றத்தை