பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
50வீட்டமைப்பு

இவர்கள் அமைத்துக்கொண்ட இல்லங்கள் நாட்டுத் தட்ப வெப்பத்திற்கு இயைந்தனவாக இருந்தன. பழைய முறையில் கட்டப்பட்ட வீடுகளில் ஒரு சமையல் அறை, தாழ்வாரம் இல்லாத புறக்கடை உடையதாய் இருக்கும். போதுமான இடவசதி இல்லாத இடங்களில் வீட்டின் இடையில் பரந்த வெளியை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு அமைத்துக் கொண்டதனால் நல்ல ஒளியும், வளியும் தாராளமாக உலவ இடம் பெற்றிருக்கும். பரந்த முற்றங்களை அடுத்த தாழ்வாரங்கள் தூண்களால் தாங்கப்பட்டிருக்கும். இவ்வாறு அமைத்த வீடுகள் கோடையிலும், மாரியிலும், வாழ்வதற்கு வசதியுள்ளவனவாக இருந்தன. சிற்சில சமயங்களில் விருந்துணவு உண்ணுதற்கெனத் தனி முறையில் அமைக்கப்பட்ட அறைகளும் உண்டு. இங்குச் சமைக்கப்பட்ட உணவைக் கொணர்ந்து பரிமாறி உண்பர். மற்றும் வீட்டு அலுவல்களைப் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கும் இவ்வறைகள் பயன்பட்டு வந்தன. பள்ளியறைகள் வீட்டின் நடுப்பகுதியி விருக்கும். மாதர்கள் நடமாடுவதற்கு வீட்டின் புறக்கடையில் தனித்தனி அறைகள் அமைக்கப் பட்டிருக்கும். இவை நாம் கூறும் அந்தப்புரம் போன்றவை. வீட்டைச் சுற்றித் தெருவரையில் புறச்சுவர் உண்டு. இது சூளையிடாத கற்களால் ஆககப்பட்டிருக்கும். இதனால், கள்வர்கள் சுவரைத் துகளத்து உட்புகுந்து களவாட வசதியாக இருந்தது.

கி. பி. 1ஆம் நூற்றாண்டுக் கிரேக்க மக்கள்; எளிய வாழ்வு வாழ்ந்து வந்தனர். உடலிற்கான