பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54

செல்லாதிரார். அங்குச் சென்று தம் முடியைக் கோதிக் கொள்வர். புழுதி நிறைந்த ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தவர் கண்களில் தூசி படிவதால் அடிக்கடி கண்ணோய் உற்று வந்தனர். அந்நோயைத் தீர்த்து வைப்பதிலும் அந்நாட்டு நாவிதர்கள் நல்ல பழக்கம் பெற்றிருந்தனர். மருத்துவம் செய்தல் நாவிதர் மரபுக்குப் பரம்பரை பழக்கம் போலும்! நம் நாட்டிலும் பண்டைக் காலத்தில் நாவிதர்களே மருத்துவம் செய்ததுண்டு. முடிதிருத்தகம் ஊர் வம்பு அளப்பதற்கு உகந்த இடமாய் இருந்தது. இங்குச் செல்பவர் மூலமுடுக்குச் செய்திகளை அறிந்துகொள்வர். எதினிய மக்கட்கும், சிசிலி மக்கட்கும் நடந்த போரட்டத்தில் எதினிய மக்கள் வென்ற செய்தி முதல் முதல் முடிதிருத்தகத்தினின்றே வெளி வந்தது.

சந்தைக்கு வந்தவர்கள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் வாங்க வேண்டியவற்றை வாங்கிவிடுவர். வாங்கியவற்றை வீட்டிற்கு தம்முடன் வந்த அடிமை ஆளிடம் கொடுத்து அனுப்பி விடுவர். இதன் பின் கொடுக்கல் வாங்கல் இருந்தால் அவற்றைச் சவுக்காரிடம் முடித்துக்கொள்வர். பகற்போதில் தம் வீட்டிற்குச் சென்றுதான் உணவு கொள்ள வேண்டும் என்பதில்லை. இவர்கள் காலையில் வெளியில் கிளம்பியதும் கையில் கட்டுணவு கொண்டே புறப்படுவர். கட்டுச் சாதம் கொண்டுபோதல் எந்நாட்டவர்க்கும் உரிய பழக்கம் போலும் நம்மவர் இதனை ஆற்றுணா என்று தம் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனைப் பகல் வேளையில் உண்டு விடுவர். “உண்டஇளைப்புத் தொண்டர்க்கு முண்டு”