பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
57

கச்டி ஆகிய இவற்றை விருப்பமாக உண்டு வந்ததனர். தொழிலாளிகள் பார்லி உணவைச் சோறு போலவும், கஞ்சி போலவும் சமைத்து உணவாகக் கொள்வர். எதினியவர்கள் காரம் மிகுந்த பொருள்களை மிகுதியும் உண்ணவும் விரும்பினர்.

ஒலிவ எண்ணெய் வெண்ணெய்க்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தேனையும் உணவுக்கு இனிமையூட்டச் சேர்த்து வந்தனர். சிற்சில நேரங்களில், அஃதாவது விசேட காலங்களில் சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும். பால், முட்டை, மா, பாற்கட்டி, தேன் ஆகிய இவற்றால் ஆம்லட் என்னும் உணவுப் பொருளைச் செய்து வந்தனர். ஆனால் ஏழைகட்கு இன்னோரன்ன கறிவகைகள் செய்யவோ உண்ணவோ வாய்ப்பு இராது.

பண்டைக் காலத்தில் கத்தியோ முள் கரண்டியோ உணவின்போது உபயோகப்படுத்தப்பட வில்லை. கைகளையே உண்பதற்குப் பயன்படுத்தி வந்தனர். சிற்சில வேளைகளில் மாவினால் செய்யப்பட்ட கரண்டிகளைப் பயன்படுத்தியதும் உண்டு. அவற்றை உபயோகித்த பிறகு எறிந்து விடுவர். உணவிற்குப் பிறகு உண்டபோது கழிக்கப்பட்ட பொருள்களை அடிமைகள் எடுத்து எறிந்துவிட்டுச் சுத்தமாக அந்த இடத்தைக் கூட்டி எடுப்பர். உணவின் பின் பழம் சாப்பிடுவர். நாமும் முப்பழத்துடன் சாப்பிடும் பழக்கமுடையவர்களன்றோ? முப்பழமொடு பால் அன்னம் என்பது தம் நாட்டுத் தொடர் மொழி விருந்தினர்க்கு இனிய பருப்பு, அத்தி கேக், மிட்டாய் ஆகிய இவைகளை ஈந்து மகிழ்வர்.