பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

இன்பமாக ஒப்பனை செய்து கொண்டிருப்பதைக் காணின், அவர்கள் அன்றடைந்த சோர்வு அனைத்தும் நீங்கப்பெறுவர். நம் நாட்டுப் பண்டைத் தமிழ்ப் பெண்களும், கணவன் பொருட்டே அலங்காரம் செய்திருந்தனர்.

இதுகாறும் கூறப்பட்டு வந்த எதினிய மாதர்களின் நிலைகளினால் அவர்கள் அடக்கி ஒடுக்கப் பட்டனரோ என்று கருதவேண்டா. அவர்கட்குரிய பெருமையும் நன்மதிப்பும் சிறிதும் குறைந்தனவாகக் கருதப்படவில்லை. சதிபதிகளுக்குள்ள காதல் அன்பு நாளடைவில் நன்கு முதிர்ந்து கனிந்து காணப்படும். அக்காதலன்பு ஒரு குறிக்கோளுடனேதான் இருந்து வந்தது. கணவன்மார் தம் மனைவியர் வீட்டு வேலைகளில் யாதொரு சிறு தவறு ஏற்பட்டாலும், அது குறித்து முகஞ்சுளிக்கும் தன்மை பெறாதவர். அவர்கள் அந்த அந்த இல்லக்கிழத்தியார் உடல் வன்மைக்கேற்ப மாறாது செய்து வந்ததைப் பாராட்டியே வந்தனர். எதினிய மாதர்களும் வரம்பு மீறி நடந்து கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு மாதம் தான் பெருந்தன்மை வாய்ந்த நல் வாழ்வு நடத்த வேண்டுமென்னும் கொள்கையையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தனள். இம் மாதர்கள் வீட்டளவில் தம் கடமைகளை ஒழுங்காகவே செய்து வந்தனர் என்னலாம். தம் கணவன்மார்களுக்கு அவ்வப்போது யோசனை கூறுவதும் நல்வழி காட்டுவதும் கணவன்மார் மகிழ நடந்து கொள்வதும் ஆன பொறுப்பை இவர்கள் ஏற்றுத் தாம் ஆண்களிலும் இத்துறையில் விஞ்சிவிடுபவர்கள் என்பதைக் காட்டியது நாம் பாராட்டத் தக்கதன்றோ !