பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65


9. எதினிய நகர அடிமைகளின் வாழ்வு

ஏதென்ஸ் நகரில் காணப்பட்ட வெளிநாட்டு மக்கள் தொகுதி அதிகமாகும். அவர்கள் வெளி நாடுகளான திரேஸ் (Thrace) ஆசியா முனை (Asia minor), லெவண்டு (Levant) முதலான பல்வேறு நாடுகளிலிருந்து தூக்கிக் கொண்டு வரப்பட்டவர்களும், போரில் வென்று அடிமைகளாக்கிக் கொண்டு வரப்பட்டவர்களும், விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளும் ஆவர். ஆனால், இம் மக்கள் தொகுதியில் மிகுதியாக உள்ளவர் விலக்குப் பணி வாங்கப்பட்ட அடிமைகளே ஆவர். அடிமை வாழ்வு அங்குப் பழக்கத்திலே அமைந்து விட்டது. அடிமைப்படுவோரும் ஒப்புக்கொண்டு அமைத்துக் கொண்ட பழக்கமாகும். அடிமை வாழ்வு தக்கதா அன்றா என்பதைப் பற்றி அவர்கள் சிந்தித்ததும் இல்லை. ஆனால், நாமார்க்கும் குடியல்லோம் என்பது தமிழரது தனிப்பண்பாகும். அரிஸ்டாடில் போன்ற பெரிய பெரிய மெய்ஞ்ஞானிகளும் அடிமைகளை வைத்துக்கொண்டு வேலை வாங்கி வந்ததாகத் தெரிகிறது. இவ்வடிமைகள் அரசியல் முறையில் உரிமை அற்றவராய், நாகரிக வாழ்வு எய்தப் பெருதவராய் வாழ்ந்தனர். கிரேக்கர் மற்றொரு கிரேக்கருக்கு அடிமைப்படுதல் மட்டும் அவர்கள் வெறுத்தனர். சுந்தரர் தம்மை அடிமை கொள்ள வந்த வேதியரை நோக்கி, ‘ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க் கடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோம்’ என்று கூறியது இப்பொழுது நம் நினைவிற்கு வருகிறது. இதனால் தம் இனத்தவர் ஒருவர்க்

1218–5