பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

 கிக் கொண்டிருந்தன. இவைகள் யாவும் நடை முறையில் இருந்த பிறகு நான்காம் நூற்றாண்டின் இறுதியில்தான் கிரீஸ் நகரில் பொன் நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன. அக்காலத்தில் ஒரு ஷில்லிங்குக்குச் சமமான டிரச்சிமா (Drachma) என்னும் நாணயம்தான் நிரந்தரமான நாணயமாகும். சிறு சிறு வெள்ளி நாணயங்கள் ஒபல்ஸ் (Obols) என்று குறிக்கப்பட்டிருந்தன.

நாட்டுப் புறங்களில் வாழும் மக்கள் ஒபல் நாணயங்களை வாயில் அடக்கிக் கொண்டு இருப்பர். இந்தப் புழக்கம் இந்தியாவிலும் சிற்சில இழிவினர் பாலுண்டு. ஏதென்ஸ் நகர மக்கள் இறந்தாலும் சிற்சில இடங்களில் இறந்தவர் வாயிலும் இந்நாணயத்தை வைத்துச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வர். இவ்வாறு செய்வதன் நோக்கம், இறந்த வர்ஸ்டைக்ஸ் (Styx) நதியைத் கடக்க வேண்டி இருத்தலின், இதனக் கடத்தி அடுத்த கரையில் சேர்க்கும் ஒடக்காரனுக்குக் கட்டணம் கொடுப்பதற்காகும் என்னும் அவர்களின் எண்ணமாம். இஃது ஒரு கற்பனையே. அவ்வோடக்காரனைச் சாரோன் (Charon) என்பர். ஒரு தொழிலாளி நாள் ஒன்றுக்கு மூன்று ஒபல் நாணயங்களையோ அரை டிரச்சிமாவையோ கூலியாகப் பெற்று வந்தான். அந்நாள் ஜூரிகளின் செலவுக்காகக் கொடுக்கப்பட்டதும் இந்த அளவான தொகையே ஆகும். பொதுவாக ஒரு தொழிலாளியின் தினசரிக் கூலி ஒரு டிரச்சிமா வாகும். நல்ல புத்திக் கூர்மையுள்ள தொழிலாளி பின் சாதாரணத் தினசரி ஊதியம் இரண்டரை டிரச்சிமாவாகும். பொதுவாக ஆசிரியர்கள் ஆண்