பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

களையும் நடையுடை பாவ8னகளையும் கைக்கொள்ளவும் விரும்பிலர். இசையால் திசை போய வரலாற்றுப் பேராசிரியர்களான ஹெரோடோடஸ் (Horedotus) ஈஜீப்த் (Egypt), மெஸப்பட்டோமியா (Mesopatamia) ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்னாரென வெளிநாடு செல்லும் விருப்பினர்களின் உருவச்சிலை ஒன்று ஈஜிப்துக்குத் தெற்கில் காணப்பட்டது. இதிலிருந்து கிரேக்கர்கள் வெளிநாட்டுப் பயண விருப்பினர் என்பதை வெளிப்படுத்தினர். ஏதென்ஸ் நகர வாணிகர்கள் நீண்டதுாரம் எல்லாம் பயணம் செய்தனர். இதன் மூலம்தான் வாணிகத்தைப் பெருக்கிப் பொருள் ஈட்டினர். இவ்வாறு பயணம் செய்து கருங்கடலின்று தானியங்களைத் தம் நாட்டிற்குக் கொணர்ந்தனர். இவ்வாறே லெவண்டினின்றும் (Lavant) வாசனைப் பொருள்களைக் கொணர்ந்தனர். தம் கைத்தொழில் வன்மையால் செய்த மண் பாத்திரங்களைக் கினியா (Guinea), தென் இதாலி (South Italy), சிசிலி (Sicily) முதலிய இடங்களில் விற்று வந்தனர். இந்த வியாபாரம் நீண்டநாள் நடந்து வந்தது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் பயணம் செய்வது என்றால் கடுமையானது என்று கூற வேண்டியதில்லை. அக்காலம் மாலுமிகளுக்குத் தம் கலங்களைத் திசையறிந்து செலுத்துதற்குத் திசையறி கருவி இல்லாத காலமாகும். இவர்கள் பெரும்பாலும் காற்று, மழை இல்லாத காலத்தில் கடற் பயணத்தைத் தொடங்குவர். இவர்கட்கு இரவில் திசையறிவித்து வந்த கருவிகள் விண்மீன்களே