பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

யன்றி வேறில்லை. மாலுமிகள் தம் மரக்கலங்களை நடுக்கடலில் உந்தார். கூடுமான வரையில் கரை ஒரங்களிலேயே செலுத்தி வந்தனர். இராக்காலங்களில் தாரகைகளும் திசையறிவிக்க இயலாமல் இருந்தால், இவர்கள் யாதேனும் ஒரு தீவிலாகிலும், கரை ஓரத்திலாகிலும் தம் கலத்தை நிறுத்திக் கொள்வர். ஏதோ சிற்சில சமயங்களில்தான் இவர் பெருங்காற்றோடு போராட வேண்டியிருந்தது. பெரும்பாலும் இவர்களின் கடற்செலவு இவர்கட்குக் கழி பேரின்பமாக இருந்தது.

மாலுமிகள் தம் கடற்செலவில் பாறைகளையும் பெருங்காற்றையும் கடந்து செல்ல வேண்டிய துன்பங்கள் ஒருபுறமிருக்க, இவர்கள் கடற்கொள்ளைக்காரர்களேயும் தப்பிப் போவதுதான் இவர்கட்குப் பெருந்துன்பமாகும். சிற்சில வாணிகர் தம் சரக்குகளைக் கப்பலில் ஏற்றிச் செல்லும்பொழுது, கப்பல்கள் கடலில் மறைந்து கிடக்கும் பாறைகளில் மோதி சிதறி வாய்ப்புண்டாதலின், இவர்கள் தம் சரக்குகளை இன்ஷுர் செய்து வந்தனர்.

நாம் இக்காலத்தில் காணும் அவ்வளவு வசதியான சாலைகள் அக்காலத்தில் இல்லை; புழுதி நிறைந்தனவாகவும், கரடு முரடானவைகளாகவும் இருந்தன. இதனால் வண்டிகளும் மற்றும் சில ஊர்திகளும் வேகமாகச் செல்ல வசதி இல்லாமல் இருந்தது. ஆகவே, வண்டிகளில் செல்வதினும் நடையை மேற்கொள்வதே நலமாக இருந்தது. சாதாரணமாகக் கோவேறு கழுதைகளும், குதிரைகளும் ஊர்தியாகவே உபயோகிக்கப்பட்டன. சிவிகைகள் மாதர்