பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75


களுக்குப் பயன்பட்டன. இவற்றை அடிமைகள் சுமந்து செல்வர்.

நம் நாட்டுப் புனிதவதியாரும் பல்லக்கில் சென்றனர் என்பதைப் பெரிய புராணத்தால் நாம் அறியலாம்.

கிரேக்கர் அடுத்துள்ள ஊர்களுக்குச் சென்று மீளுதலில் மிக விருப்பமுடையவர். இவர்கட்கு மிகவும் விருப்பமான பயணத்துக்குரிய இடமாகக் கருதப்பட்ட ஒலிம்பியா (Olympia) அல்லது காரின்த் (Corinth) போன்ற இடங்களில் இவர்கள் சென்று தங்குதற்கான தனிப்பட்ட விடுதிகள் எங்கும் கட்டப்பட்டு இருந்தன. ஏனைய இடங்கட்கு இவர்கள் செல்லின், பொது விடுதிகளில் தங்கி வந்தன்ர்.

இந்த விடுதிகள் யாத்திரிகர்களிடமிருந்து அதிகக் கட்டணத்தை வாங்கி வந்தனவேனும், அதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுத்தில. யாத்திரிகர்கள் இத்தகைய விடுதிகளில் தங்கிப்படுக்க வசதியற்று மூட்டுப் பூச்சிகளால் துன்பப்பட்ட நிலையை அரிஸ்டோபென்ஸ் (Aristophanes) தாம் எழுதிய ஒரு நாடகத்தில் நன்கு தெரிவித்துள்ளார். ‘டிண்டி பத்'தின் தொந்தரவு தொன்று தொட்டது போலும்!

பல்வேறு கிரீஸ் நகர மக்கள் மேற்கொண்ட தொழில்களில், அரசியல் சார்புடைய தொழில்கள் பெரிதும், சாதாரணப் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டன. இவர்களிடையே வழக்கறிஞர்களோ குருக்கள்மார்களோ இலர். குறிப்பிட்ட வேலைகளைப் புரிந்து தொண்டாற்றுதற்கு மக்களிடையே, ஒருவரைக் குருவாகத் தேர்ந்தெடுத்து வந்தனர். இவ்