பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மல் இவற்றின் மீது சித்திரங்களும் தீட்டப்பட்டு அழகு செய்யப்பட்டன. இவ்வாறு தீட்டப்பட்ட சித்திரங்கள், புராண காலத் தொடர்புடையனவாகவும், மக்கள் வாழ்வுகளே நன்கு தெரிவிப்பனவாகும் இருக்கும்.

சிற்பக்கலை கிரேக்க நாட்டில் தலைசிறந்து விளங்கியது. பெரிய பெரிய வாயில்களின் வளைவுகள் மிகவும் அற்புதமாக இருக்கும். கோயில்களிலும், சிற்பங்கள் அமைந்திருந்தன. ஆனால், அவை சாதாரணமானவை. மூலத்தான உருவம் நீண்ட சதுரமான இடத்தில் அமைத்திருக்கும். மேற்கூரை பெரிய பெரிய தூண்களால் தாங்கப்பட்டிருக்கும்.

இதன் கைத்திறன் மிகமிக வியக்கத்தக்கதாகும். ஆலயக் கட்டட அமைப்பு கவினுடையதாக இருந்ததோடு அல்லாமல் ஆலயத்தில் இரு முனைகளில் இருக்கும் தெய்வங்களின் சிலேகள் வேலைப் பாடு அமைந்த உருவங்களாக உள்ளன. இத்தகைய சிற்பங்களின் அமைப்பை நம் தென்னாட்டுக் கோயில்களிலும் சிறக்கக் காணலாம். காண விழைவோர் சித்தன்ன வாசல், மகாபலிபுரம், தஞ்சை, திருவிடைமருதுார், ஆவுடையார் கோயில் முதலான இடங்கட்குச் சென்று கண்டு களிப்பாராக. கோயிலின் புறச்சுவர்களும் ஓவியச் சிற்பங்களால் பொலிவுற்று இருந்தன.

நம் நாட்டில் வீடுகளும் சித்திரம் தீட்டப்பெற்றனவாகச் சிறந்து விளங்கின. இவ்வாறு எழுதப்பட்ட மாடங்கள் பல இருத்தன என்பது பரிபாடல் முதலான சங்கத்துச் சான்றோர் நூல்களில் பரக்கக்