பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79


காணலாம். அண்மையில் இருந்த மாயூரம் திரு. வேதநாயகம் பிள்ளை அவர்களும், தம் நீதி நூலில் வீடுகள் சித்திரங்களால் பொலிவுற்றதை நயம்படப் பாடியுள்ளார்.

சிற்சில தெய்வங்களின் உருவம் செம்பினாலும் சலவைக் கல்லாலும் இயன்றவையாய் இருந்தன, இவை ஆலயங்களிலே அன்றித் தனித்தனி இடங்களில் இருக்கும் நிலையைப் பெற்றிருந்தன. எக்ரோ போலிஸுக்கு (Acropolis) அருகிலிருக்கும் எதினி (Athene) என்னும் பெரிய தெய்வத்தின் உருவம் செம்பினால் இயன்றது. இதனை அமைக்கும் பொறுப்பு சிற்பத்தில் சிறந்த பியிடியஸ் (Pheidias) என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இவருடைய முழுத்திறன் அதே உருவம் பொன்னாலும் தந்தத்தாலும் செய்யப்பட்ட ஒன்றில் மிகுதியும் காட்டப்பட்டது எனலாம். இன்னாரன்ன சிற்பிகளால் அமைக்கப்பட்ட சிற்ப ஒவியங்களின் கலைநுட்பம் பின்னால் வந்த கிரேக்கர்களுக்குத் துணைபுரிந்ததாகத் தெரிகிறது. இதிலிருந்து கிரேக்கர்களின் சிற்பக்கலையின் மேம்பட்ட அறிவு நுட்பத்தை நன்கு மதிப்பிடலாம். உடல் உறுப்புக்களே நன்கு கவனித்துச் செயற்கை அமைப்பிலும், இயற்கை அமைப்பைக் கொண்டு வரும் திறன் படைத்திருந்தனர் எனலாம்.

ஏதென்ஸ் நகரமக்கள் இச்சிற்பக் கலையைப் பிறர் கண்டு பாராட்டுவதற்காக மட்டும் செம்மையாகச் செய்யாமல் தாமே அதில் ஒர் ஊக்கமும், உணர்ச்சியும், கொண்டு தாமே வியக்கும் வண்ணம்,