பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


நெடுந்தூரத்திலிருந்து வீடு திரும்பும் மாலுமிகள் கண்டபோது, அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நாம் புற நகரை அண்டிவிட்டோம் என்பதே அவர்கள் மகிழ்வுக்குக் காரணம். ஈண்டுக் கூறப்பட்ட அமைப்புக்களோடு நம் நாட்டு அமைப்பையும் ஒப்பிட்டு இவ்விரண்டு நாடுகளின் அமைப்புத் தன்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். கடலில் சென்று கலத்தில் வீடு திரும்புபவரோ, அன்றி நெடுந்தொலைவிலிருந்து வருபவரோ, இன்ன இடத்தில் ஊர் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காகவே நம்மவர், கோபுரங்களையும், உயரிய மாடங்களையும் அமைத்து இரவில் விளக்கேற்றி வைத்தனர். இதன் விளக்கத்தைப் பத்துப் பாட்டு முதலான பனுவல்களில் பரக்கக் காணலாம்.


10. பொழுதுபோக்கு

“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது திருமூலர் வாக்கு. இந்த வாக்கின் உண்மையை அறிந்தவர் போன்றவர் ஏதென்ஸ் நகரவாசிகள். பொதுவாக ஒவ்வோர் ஏதென்ஸ் நகரத்தவனும் உடற்பயிற்சி செய்வதற்கோ மற்றும் உடற்பயிற்சிக்கான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கோ மிகவும் அவா உள்ளவனாய் இருந்தான். கிரேக்கர் உழைத்ததனால், அன்று பெறவேண்டிய கூலியைக் கூடவிரும்பாமல், பயிற்சி செய்வதிலேயே விருப்பமுடையவராய் இருந்தாரெனில், அவர் உடற்பயிற்சியின் மீது கொண்ட விருப்பத்தை விளக்க வேண்டுவதில்லை யன்றோ! வயது முதிர்ந்தவர்களும்

1218–6