பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


ஏதேனும் ஒரு பயிற்சியை மேற்கொண்டுதான் இருந்தனர். அவர்கள் கோழிச் சண்டை விளையாட்டை மேற்கொள்வர். இவ்விளையாட்டில் நம்மவரும் பெரு விருப்புடையர். இதனைக் கோழியையும் யானையையும் சண்டையிட விட்டு,கோழி வென்றதற்கு அறிகுறியாகக் கோழியூர் என்ற ஒன்றை அமைத்துக் கொண்டனர் என்பதனால் நன்கு அறியலாம்.

செல்வர்கள் குதிரைகளை வளர்த்துப் பந்தயம் விட்டு வந்தனர். இவை யாவும் நமக்குரிய பயிற்சியும் ஆகும். சுந்தரரும், ‘காற்றனைய பரிமாவும் கடி தருள வேண்டும்’ என்று இறைவனைக் கேட்கின்றனர். இதனால் குதிரை மீதிவர்ந்து குலவவேண்டுமென்பது, அவர் குறிக்கோளாகுமென்பது தெரிய வருகிறதன்றோ?

இளைஞர்கள் நாம் ஆடும் கண்ணும்பூச்சி ஆட்டம் போன்ற ஆட்டத்தில் பழகி வந்தனர். இதனை அவர்கள் பிரான்ஸி பிளை (Bronze Fly) என்று குறிப்பிடுவர். பந்தாட்டங்களும் அவர்கள் ஆடிய ஆட்டமாகும். அவற்றுள் ஒன்று வளைகழிப் பந்தாட்டம் என்பர். அதாவது ஹாக்கி ஆட்டம். சாதாரண நடனமும் இவர்கள் கொண்ட பயிற்சியில் ஒன்று. அப்போது பந்துகளையும் பயன்படுத்தினர். நடனம் கிரேக்கர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஆட்டமாகும். இதில் கலந்து கொண்டவர்களுக்கிடையே நட்புரிமையும் நல்வாழ்வும் உடன்வளர்கின்றனவாக அவர்கள் கருதினர். தனித் தனியே தம் தம் ஆற்றலைக் காட்டத்தக்க பயிற்சிகளும் இவர்கள் பால்