பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்கர் தாம் வழிபடும் தெய்வங்களிடத்துப் பயபக்தி கொண்டு இருந்தனர். கிரேக்கர் வழிபாடு செய்கையில் நின்றுகொண்டு அமைதியாகப் புரிவர். அவர்கள் மண்டியிட்டு வணங்கும் வணக்க முறையை வெறுத்து ஒதுக்கினர். அவர்கள் இறப்பு என்பது தடுக்க முடியுாத ஒர் இயற்கை நிகழ்ச்சி என்று நன்கு உணர்ந்திருந்தனர்.

‘வாழ்வானது மாயம்; இது மாய்ந்து போவது திண்ணம்’ என்னும் நம் கொள்கையே அவர்கள் கொள்கை. ஆகவே, இவ்விறப்பை அமைதியாகவும் வீரத்தோடும் ஏற்றுக்கொள்வதே தக்கது என்பது அவர்கள் துணிவு.

இறந்த உயிர் கீழ் உலகம் செல்லுமென்பதும், அவ்வுலகில் ஊக்கமாகவோ உணர்ச்சியாகவோ இருந்து எதையும் அனுபவிக்க முடியாதென்பதும் அவர்கள் உள்ளக்கிடக்கை. அவர்கள் இறந்த உடலைச் சுட்டெரித்து வந்தனர். பின்பு அவ்வுடற் சாம்பலை ஒரு குவளையில் வைத்து மூடி, நகர்க்கு வெளியே புதைத்து வைப்பர். இவ்வாறு செய்வதன் நோக்கம் இவ்விறந்த உடலினிடத்து இரங்கும் தன்மையாளர் தம் நன்றியை அறிவித்துக் கொள்ளுவதற்குப் படையல் முதலியவற்றை அளிப்பதற்காக ஆகும். இறந்த உயிர் எளிதில் தான் வாழ்ந்த இடத்தை விட்டுச் செல்ல இசையாமல், தான் அனுபவித்த இன்பங்களை விரும்பி எதிர்நோக்கி இருப்பதாகக் கிரேக்கர் கருதி இருந்தனர். ஆதலால் அவ்வுயிர்க்குப் படையலும் விருந்தும் அளித்து வந்தனர். இது நாம் ஆண்டுக்கொருமுறை திவசம்