பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

கிழவிக்குக் கோபம் கனலாக மூண்டது. “ஓகோ! வெள்ளை மருதுக்கு மிஞ்சிப்போச்சோ?” என்று கேட்டாள்.

‘கிழவியா இப்படிப் பேசுகிறாள்’ என்று கணக்குப் பிள்ளைக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. சம்ஸ்தானாதிபதியாக உள்ள வீரரை அவ்வளவு அலட்சியமாகப் பேசும் தைரியம் வேறு யாருக்கும் இல்லை. அப்படிப் பேசி அந்தச் சம்ஸ்தானத்தில் வாழ முடியுமா?

கணக்குப் பிள்ளைக்கு இந்தக் கிழவியை அடக்க தம்முடைய துரை அவர்களை அழைத்து வர வேண்டும் என்று தோன்றி விட்டது. கோபத்தால் உடம்பு பதற ஓடினான். வெள்ளை மருது துரைக்கு முன்னால் போய், கிழவி கூறியதைப் படபடப்புடன் கூறினான்.

வெள்ளை மருது செய்தியை விசாரித்து அறிந்தார். அந்தப் “புலவர் வீட்டுக் கிழவியா? அப்படிச் சொல்ல மாட்டாளே! நீ என்ன சொன்னாயோ?” என்றார்.

கணக்குப் பிள்ளை கிழவியைப் பற்றியே குறை கூறினான். வெள்ளை மருது அவனுடைய தொந்தரவு பொறுக்காமல் கிழவியின் வீட்டுக்குப் புறப்பட்டார்.

கிழவியின் வீட்டிற்கு ஆளுடன் யாவரும் சென்றார்கள். அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது கிழவி தன் பேரனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டிக் கொண்டிருந்தாள். அவள்