பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

வருகிறார் என்று தெரிந்து விட்டது. உடனே குரல் எடுத்துத் தாலாட்டுப் பாட ஆரம்பித்தாள்.

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆர் இராரோ
கட்டிக் கரும்பே என் கண்மணியே கண்வளராய்
குன்றுமே கம்கிளம்பி குன்றாற்றி லேவிழுந்து
வெள்ளம் வருது என்ற தல்லால்
வெள்ளை மருது என்றேனோ
கொஞ்சி விளையாடும் குழந்தைகள் காலிலிட்ட
மிஞ்சிபோச் சென்ற தல்லால்
மிஞ்சிப்போச் சென்றேனோ?

அவள் செய்த தந்திரம் அது. தான் கூறிய வார்த்தைகளின் தொனியையும் பொருளையும் மாற்றி விட்டாள், வெள்ளை மருது என்பதை வெள்ளம் வருது என்று மாற்றி, மிஞ்சிப் போச்சோ என்பதை மிஞ்சி போச்சு என்று மாற்றிக் காட்டினாள். வேகமாகப் பேசுகையில் இரண்டு வகைத் தொடர்களுக்கும் தொனியில் வித்தியாசம் தெரியாது.

“நான் என்ன செய்வேன்? வெள்ளம் வந்ததையும், தண்ணீரில் அளைந்த குழந்தையின் மிஞ்சி காணாமற்போனதையும் சேர்த்துச் சொல்லப்போக இப்படி விபரீதமாக விளைந்ததே” என்று அந்தக் கிழவி விளக்கியிருந்தாலும் கூட, அது வெள்ளை மருதுக்குச் சமாதானமாகத் தோன்றுயிருக்காது ஆனால் கிழவி பாடிய தாலாட்டுப் பாட்டு அத்தனை வார்த்தைகளையும் சொல்லாமற் சொல்லியது. இதைக் கேட்டு எல்லோரும் திகைத்து விட்டனர்.

வெள்ளை மருது வீட்டிற்குள் நுழையவில்லை. இடைவழியிலேயே தம் பரிவாரத்துடன்