பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

திரும்பிச் சென்று விட்டார். அரண்மனைக்குப் போனபிறகும் கூட அவர் காதில் அந்தக் கிழவி பாடிய தாலாட்டுப் பாட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது.


2. நம்பினோர் கெடுவதில்லை

ங்கைக் கரையில் பண்டிதர் ஒருவர் கங்கை காற்றின் பெருமையைப் பற்றியும் அதில் நீராடுகிறவர்கள் தங்களுடைய பாவங்களைப் போக்கிக் கொள்ளும் சிறப்பும் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்தார். பலர். அவருடைய புராணத்தைக் கேட்டு மகிழ்ந்தார்கள். அப்பொழுது கைலாசத்தில் இருந்த கைலாசபதியைப் பார்த்துப் பார்வதி தேவி, “கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோருக்கும் பாவம் ஒழிந்து நல்ல கதி கிடைக்குமென்றால், கைலாசத்தில் அத்தனை பேர்களுக்கும் இடம் காணாதே” என்றாள்.

“அடி பைத்தியக்காரி, கங்கையில் மூழ்குகிறவர்கள் எல்லோரும் தங்களுடைய பாவங்கள். எல்லாம் போகும் என்று நம்புவது இல்லை. புராணம் படிக்கிறாரே, அவருக்குக்கூட இந்த நம்பிக்கை இல்லை. யார் உண்மையாக நம்புகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கைலாச பதவி கிடைக்கும்” என்று இறைவர் கூறினார். உடனே