பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14

இப்பொழுது தான் பண்டிதர் படித்த புராணத்தைக் கேட்டேன். இந்தக் கங்கையில் ஒரு தடவை மூழ்கினால், எல்லாப் பாவங்களும் தொலையும் என்று சொன்னார். இதோ நான் ஒரு முழுக்குப் போடுகிறேன். என்னுடைய பாவங்கள் தொலையட்டும்” என்று சொல்லி முழுக்கும் போட்டான். பிறகு நீந்திச் சென்று அந்தக் கிழவரை இழுத்துக் கொண்டு, வந்தான்.

உண்மையான நம்பிக்கையோடு இருந்து வந்த முரடனுக்கு முன்னாலே கைலாசபதியாரும். பார்வதி தேவியும் தங்கள் தரிசனத்தைக் காட்டி. ஆசீர்வாதம் செய்தார்கள்.

கைலாசபதி பார்வதிதேவியைம் பார்த்து, “பார்த்தாயா, இத்தனை பேர்கள் இருந்தும் இந்த ஒருவனைத் தவிர மற்ற எவருக்கும் நம்பிக்கையில்லாமல் போயிற்று புராணம் படித்த பண்டிதருக்கே நம்பிக்கையில்லையே. “நம்பினோர் கெடுவதில்லை” என்பதை இந்த ஒருவன்தான் நிரூபித்தான். ஆதலால் இவன் ஒருவனுக்குத்தான் கைலாசத்தில் இடம் இருக்கும்” என்று சொன்னார்; பிறகு அவர்கள் இருவரும் மறைந்து போனார்கள்.