பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16

மன்னவன் ஒருனோடு போர் புரிவதைப் பற்றித் தன்னுடைய மந்திரிகளோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.

புலவர் அரண்மனையை அடைந்ததும் அவரை இன்னார் என்று அறிந்து கொண்டு அதிகாரி ஒருவர் அவரை ஓர் இடத்தில் தங்கச் செய்து, வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார். மாமன்னனைக் காண வேண்டும் என்ற ஆவலோடு வந்த புலவர், “மன்னரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார்.

“நீராடி, உணவு கொண்டு இருங்கள். மன்னரைப் பார்க்கும் சமயம் தெரிந்து சொல்கிறேன். அப்போது போய் காணலாம்” என்று அதிகாரி சொன்னார்.

புலவர் கட்டியிருந்த மனக் கோட்டை தளர்ச்சியை அடைந்தது. ‘புலவர்கள். எல்லாம் பாண்டியனை வானளாவப் புகழ்ந்தார்களே! அப்படியே ஓடி வந்து கட்டிக் கொள்வான் என்று சொன்னார்களே; இங்கு நடப்பது வேறு விதமாக அல்லவோ இருக்கிறது?’ என்று அவர் எண்ணினார். ‘என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ என்று அவர் பொறுத்திருந்தார் அன்று முழுவதும் பாண்டிய மன்னரை அவரால் முடியவில்லை.

அதிகாரி, இதோ பார்க்கலாம். மிகவும் முக்கியமான ஆலோசனையில் மன்னர் ஈடுபட்டிருக்-