பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18


புலவர் வந்திருக்கும் செய்தியைத் தெரிவிக்கச் சென்றார்.

கிழவியின் தந்திரம்.pdf


சார்வ பௌமர் என்ற புலவர் வந்து மூன்று தினங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்' என்ற செய்தி மாமன்னன் காதில் விழுந்தது. தன்னுடைய அவைக்களத்திற்கு அதுகாறும் வராத புலவர் அவர் என்பதை அவன் உணர்வான். “அவரை வந்த உடனே என்னிடம் அழைத்து வருவதற்கு என்ன?” என்று கேட்டான்.

“மன்னர்பிரான். மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தமையால்...” என்று அதிகாரி சமாதானம் சொல்ல வந்தார்.