பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

ஆலோசனையைச் சிறிது நேரம் கழித்துச் செய்யலாம். ஆனால் புலவரைக் காத்திருக்க வைக்கலாமா?” என்று கோபத்துடன் அரசன் கேட்டான்.

“சரி, இவ்வளவு நாள் காத்திருக்கும்படிச் செய்த குற்றத்திற்கு நானே அவர் உள்ள இடத்திற்குச் சென்று அவரைப் பார்ப்பேன். தமிழுக்கு நான் செய்த அவமானத்திற்கு இப்படிச் செய்வதுதான் பரிகாரம்” என்று சொல்லிப் புறப்பட்டு விட்டான் பாண்டியன்.

அங்கே புலவர், “இன்னும் அதிகாரி வந்து சேரவில்லையே என்றுகாத்திருந்தார். சார்வபௌமகம் தம்முடைய கோபத்தைப் பாட்டிலே காட்டத் தொடங்கினார்.

“இவன் தமிழ் நூல் அறிவில் அகத்தியன் என்று சொல்வதெல்லாம் அறியாமை, உண்மையல்ல” என்று சொல்ல ஆரம்பித்தார்.

அதற்கு முன்பே பாண்டியன் புலவரைக் காணப் புறப்பட்டுவிட்டான். பாட்டு முடிவதற்குள் அரசன் புலவரை நாடி வருகிறான் என்பதை அதிகாரி ஓடி வந்து சொன்னார். புலவருக்கு வியப்பு உண்டாயிற்று. ‘இவ்வளவு நாள் காக்க வைத்த அரசன் நேரே வருவதாவது இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது’ என்று நினைத்தார், அதற்குள் அதிகாரி தாம் அரசனிடம் புலவர் வரவை இதுவரையில் தெரிவிக்காத குற்றத்தை