பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

ஒப்புக்கொண்டு, “நீங்களே என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று புலவர் காலிலே விழுந்தார்.

புலவருக்கு உண்மை விளங்கி விட்டது. மன்னன் தம்மைப் பார்க்க வருவதை எண்ணிய போது அவர் உடம்பு புளகம் போர்த்தது. அவர் மன்னனை எதிர் கொண்டு வரவேற்கப் புறப்பட்டார்.

பாண்டியனும் புலவரும் சந்தித்தார்கள். “புலவர் பெருமானே, என் பிழையைப் பொறுக்க வேண்டும்” என்று அரசன் கூறினான். புலவர் “நான் முதலில் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால் உண்மை தெரிந்த பிறகு மாற்றம் அடைந்தேன். என் கவியும் மாற்றம் அடைந்தது” என்றார்.

“கவி மாற்றம் அடைந்ததா” என்று ஆவலோடு கேட்டான் அரசன்.

புலவர் தாம் தொடங்கிய பாட்டை முடித்து விட்டார். ஆரம்பித்தபோது இகழ்ச்சியாகப் பாட எண்ணியே ஆரம்பித்தார். பாட்டு முடிவதற்குள் உண்மை தெரிந்த பிறகு அந்தப் பாட்டைப் பாண்டிய மன்னனுக்கு உரிய புகழைச் சொல்வதாக அடையுமாறு சொல்லி முடித்தார்.

“அகத்தியன் என்று இவனைச் சொல்வது அறியாமை, உண்மையன்று” என்றல்லவா தொடங்கினார்? இப்போது அந்த அகத்தியன் இவன் கால் கழுவிய நீரைக் குடித்தல்லவா தமிழ் கற்றான்? அப்படி இருக்க, இவனை அகத்தியன்