பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

என்று சொல்லாமா?” என்று பொருள் தோன்று மாறு பாட்டை முடித்தார்.

பாண்டியன் பாட்டைக் கேட்டுக் பிரமித்துப் போனான். “நான் செய்த பிழைக்கு அகத்திய முனிவர் அல்லவா இகழ்ச்சியைப் பெற்றார்?” என்றான்.

புலவர் உடனே, “நான் ஒன்றும் தவறாகச் சொல்லவில்லையே! பழங்காலத்தில் இருந்த கடல் வடிம்பலம் நின்றவன் என்ற பாண்டிய மன்னனுடைய திருவடிகளைக் கடலானது அலம்பியது. அந்தக் கடல் நீரை அகத்திய முனிவர் ஆசமனியம் செய்தார்” என்ற வரலாற்றைக் கூறினார்.

பாண்டியன் மேலே ஒன்றும் சொல்ல இயலாபால் அன்பும் வியப்பும் தோன்றப் புலவரைப் பார்த்தாள்.


4. மெய் சொல்வதானால் மதிப்பு உண்டாதல்

ர் ஊரில் மாடசாமி என்ற வழிப்பறிக் கொள்ளைக்காரன் ஒருவன் இருந்தான் அவன் மறைந்திருந்து வழியில் போகிறவர்களுடைய பொருள்களை யெல்லாம் கவர்ந்து கொள்வான்.