பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

ஒரு சாமியார் ஒரு நாள் அந்தப் பக்கமாக வந்தார். வழக்கம் போல் மாடசாமி அவரை வழி மறித்து அடிக்கப் போனான். அந்தச் சாமியார். “அடிக்காதே அப்பா, என்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது. அதை உனக்கே கொடுத்து விடுகிறேன். நீ ஒரு காரியம் செய்ய வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லாதே! நீ அவ்வாறு இருந்தாயானல் உனக்கு மேலும் மேலும் நன்மை உண்டாகும்” என்று கூறினார்.

மாடசாமி அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொண்டு, அப்படியே நடப்பதாகத் தீர்மானித்தான் பக்கத்து ஊராகிய தலை நகரில் அரசனுடைய அரண்மனை இருந்தது. அந்த அரண்மனைக்குச் சென்று திருட வேண்டுமென்று அவன் எண்ணங் கொண்டான். கறுப்பு உடைகளை அணிந்து கொண்டு அரண்மனைக்குச்சென்றான். எப்படியோ ஏறிக் குதித்து, சன்னல் வழியாக அரண்மனைக்குள் புகுந்தான். அங்கே சாவிகள் மாட்டப்பட்டிருந்தன.

எல்லோரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள் அவன் களஞ்சியத்தின் சாவியை எடுத்துக் கதவைத் திறந்து அதனுள் புகுந்தான். அங்குள்ள பெட்டியில் மூன்று இரத்தினங்கள் இருந்தன. மாடசாமி தன்னோடு வேறொருவனை அழைத்து வந்திருந்தான். அவனை வாசலில் காவலாக வைத்து விட்டுத்தான் அரண் மனைக்குள் நுழைந்தான். அந்தப் பெட்டியில்