பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

யெல்லாம் அவனுடைய வயிற்று பசி அறியுமா? பசி மிகுதியானால் மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, பெண்களின் மேல் வைத்த காதல் ஆகிய பத்தும் இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.

 வறுமையினாலும் பசியினாலும் வருந்திய குமரேசன், நாகப்பன் என்ற கொடை வள்ளலிடம் சென்று தனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கிக் கொள்தென்று தீர்மானித்தான். முழு மனத்தோடு அந்தத் தீர்மானத்தைச் செய்யா விட்டாலும் அவனுடைய வயிற்றுப் பசி. அவனைப் பிடர் பிடித்து உந்தியது. ஆகையால், அவன் நாகப்பனிடம் போனான்
 நாகப்பனுக்குக் குமரேசன் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவன் என்று நன்றாகத் தெரியும். ஆகவே, குமரேசனைக் கண்டவுடன் நாகப்பன், “தாங்கள் எங்கே வந்தீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். குமரேசன் மிகவும் நாணத்தோடு பண உதவி செய்யுமாறு கேட்டான். ஒரு நாளும் பிறரிடம் எதையும் வாங்கத் துணியாத குமரேசன் கேட்டவுடன், நாகப்பன் அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தான். குமரேசன் அதைப் பெற்றுக் கொண்டு தன் ஊரை நோக்கிச் சென்றான்.
 நாளடைவில் கொடை வள்ளலாகிவ நாகப்பனும் வறுமைக்கு ஆளானான். வந்தவர்