பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/40

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
38

புலவர் தம்முடைய செருக்கழிந்து அறிவு பெற்றார்.8. தாய் அன்பு

ஓர் ஊரில் ஒரு தாய்க்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். இந்த நான்கு பேர் சந்திரன் சூரியன், வருவணன், வாயுதேவன் முதலியோர் ஆவர். அன்னை நான்கு பிள்ளைகளையும் மிகவும் அன்புடன் வளர்த்து வந்தாள். ஒரு நாள் அவர்களுக்குத் தெரிந்தவர் வீட்டில் நடந்த விருந்திற்கு நான்கு பிள்ளைகளையும் அழைத்திருந்தார்கள். அந்நால்வர்களும் விருந்துக்குச் செல்ல ஆயத்தமாயினர். அப்பொழுது தாய் அவர்களை நோக்கி, “குழந்தைகளே, விருந்தில் பட்சணங்கள் போடுவார்கள் அவற்றில் எனக்கு சிலவற்றை எடுத்து வாருங்கள்” என்று கூறி அனுப்பினாள்.

நான்கு பேர்களும் விருந்துக்குப் போனார்கள். மிகவும் சுவையான காய்கறிகளையும், பட்சணங்களையும் விருந்து படைத்தவர்கள் போட்டார்கள், சூரியன் தன்னுடைய தாய் கூறியற்றை நினைத்துக் கொண்டு பட்சணங்களைத் தனியே எடுத்து வைக்கலாமா என்று எண்ணினான். மற்றப் பிள்னைகள் இருக்கிறார்களே, அவர்கள் எடுத்து வைப்பார்கள், நாம் எடுத்து வைக்க வேண்டாம்