பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40
கிழவியின் தந்திரம்.pdf

 -கள். சந்திரன் மட்டும், “அம்மா உனக்காக நான் எல்லாப் பட்சணங்களையும் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி அவற்றைத் தன் தாயிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு மறுபாதியைச் சந்திரனிடம் கொடுத்து. அவனை உண்ணுமாறு பணித்தாள். தன்னிடமுள்ள பட்சணங்களை நன்றாகச் சுவைத்துத் தின்றாள். சந்திரனும் அம்மா கொடுத்ததை உண்டு மகிழ்ச்சியடைந்தான்

அப்பொழுது அந்தத் தாய் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து, நீங்கள் நான்கு பேரும் என்னுடைய வயிற்றில் பிறந்திருந்தாலும், சந்திரனைத் தவிர மற்ற மூன்று பேர்களும் தங்களுடைய வழிறே பெரிதென்று எண்ணி விட்டீர்கள்; நான்