பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

ஒருத்தி இருப்பதை நீங்கள் மூவரும் எண்ண வில்லை. சந்திரன் ஒருவன்தான் என் மனதுக்கு உகந்த பிள்ளையாக இருக்கிறான். சூரியனே உன்னுடைய வெய்யிலில் காய்ந்தவர்கள் "நாசமாய்ப் பேரகிற இந்தச் சூரியன் என்ன கொளுத்து கொளுத்துகிறான்” என்று உன்னைத் திட்டட்டும். ஏ வாயுதேவா, நீ வீசியடிக்கும் பொழுது, "இது என்ன, பேய்க்காற்றாக இருக்கிறதே,இது நின்று தொலைக்காதா” என்று உன்னைத் திட்டட்டும். வருணனே நீ அடா மழை பெய்யும் பொழுது “என்ன பிரளய காலத்து மழையாக இருக்கிறதே! இதற்கு என்ன இப்பொழுது கேடு வந்துவிட்டது? நீ நாசமாகப் போக” என்று திட்டட்டும். ஆனால் சந்திரனை சிறு குழந்தைகளும், பெரியவர்களும், காதகலர்களும் மகிழ்ந்து வரவேற்று. எல்லோரும் நிலவில் விளையாடி மகிழ்ந்து உன்னை வாழ்த்துவார்களாக! மற்றவர்களுக்கு எல்லாம் திட்டுக் கிடைத்தாலும், உனக்கு வாழ்த்தே கிடைக்கட்டும்” என்று கூறினாள்.

தாயினிடம் அன்பும் விசுவாசமும் கொண்ட சந்திரனை எல்லோரும் புகழ்கின்றனர். இராம பிரானைக்கூட "ராமச்சந்திர மூர்த்தி" என்றும் கண்ணனை ‘கிருஷ்ண சந்திரன்’ என்றும் பாராட்டுகிறார்கள்.

தாயிடம் உள்ள பக்தி சந்திரனுக்கு எல்லோரும் பாராட்டும் நிலையை வாங்கித் தந்தது.