பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43
கிழவியின் தந்திரம்.pdf

 சில கல்யாணங்களில் கச்சேரி செய்யும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது அதனால் பொருள் வருவாயும் உண்டாயிற்று. பொருள் சிறிது சேர்ந்தாலும் தன்னை ஆதரித்து வந்த குடும்பங்களுக்கு உதவி செய்வதையும் அவர்கள் வழங்கிய சாப்பாட்டைச் சாப்பிடுவதையும் அவன் விடவில்லை.

அவனுடைய உடல் மெருகேறித் தளதள வென்று வளர்ந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். அவனை ஆதரித்த வீட்டுக்காரர் ஒருவர் அவனைப் பார்த்து, ' கோபாலா உனக்குச் கல்யாண வயது வந்து விட்டது. ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக வாழ்வதற்கு நீ முயற்சி செய்ய வேண்டும்.