பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45

-தார். ஒரு நல்ல நாளில் கோபாலன். தன் மனைவியுடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தான்.

ஒவ்வொரு நாளும் அவன் தனக்குச் சங்கீதம் சொல்லி வைத்த சங்கீத வித்துவாளையும் தனக்குத் திருமணம் செய்து வைத்த பெரிய வரையும், மனமார வாழ்த்தினான். அவர்களை அடிக்கடிப் போய்ப் பார்த்து நமஸ்காரம் செய்து விட்டு வந்தான்.

ஆரம்பத்தில் ஏழையாக இருந்தாலும் இடை விடாத முயற்சியினால் முன்னுக்கு வந்த கோபால னைக் கண்டு எல்லோரும் பாராட்டினர்.

“முயற்சி திருவினையாக்கும்'” என்ற பழமொழி அவன் வாழ்க்கையில் பலித்தது.10. கடலும் கிணறும்

ந்த ஊர் மிகச்சிறியது. ஆனாலும் பெரிய உள்ளங்களைப் பெற்ற உபகாரிகள் சிலர் அதில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய பெருமைகளை உலகுக்குத் தெரிவிப்பதற்காகவே., குறுகிய மனம் உடைய பலரும் அந்த ஊரில் இருந்தார்கள். தல்லவர்களுக்குள் ஒருவர் சில நிலங்களை வைத்துக் கொண்டு தன்னால் முடிந்த அளவுக்கு