பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47


வாழுகிறார்” என்று தம்மோடு வந்தவர்களை ஔவையார் கேட்டார்.

“இல்லை அவர் சிறிய வீட்டில் வாழ்கிறார். இந்த மாளிகையில் வாழ்கிறவர்கள், அவரைக் காட்டிலும் பெருஞ் செல்வர்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.

“இந்த ஊரில் இவ்வளவு பெரிய செல்வர்கள் இருக்கிறார்கள் என்று யாரும் என்னிடம் சொல்ல வில்லையே” என்றார் அந்தத் தமிழ் மூதாட்டியார். அதற்கு யாரும் விடை ஒன்றும் சொல்லவில்லை.


கிழவியின் தந்திரம்.pdf


ஔவையார் அந்த வேளாளச் செல்வரத வீட்டிற்குச் சென்றார். ஔவையார் வருவதை அறிந்த அந்தச் செல்வர் அவரை எதிர் கொண்டு