பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52

செல்வத்தை வேறு யாராவது துன்புறுத்தி அடித்துக் கொண்டு போய்ச் . செலவழிப்பார்கள். ஆனால் இவரிடம் எந்தத் திருடனும் வர நினைக்க மாட்டான். இவர் நிடூழி காலம் வாழ்ந்தால் எப்படியாவது தருமத்தைப் புரிந்து கொண்டே இருப்பார். பணக்காரர்கள் தங்களிடம் பணம் சேர்வதனால் வரும் துன்பங்களைத் தருமம் செய்து போக்கி கொள்ளலாம். அவ்வளவு செய்யாதவர்களுக்குத் பணம்சேர சேரத் துன்பமும் உடனே வந்து சேரும்” என்றார் ஔவையார். அதனால் அவர்களுக்குத் துன்பம் உண்டாகட்டும் என்று சபிக்கவில்லை. இன்னும் பணம் சேரட்டும் என்று சொன்னார்.11. பிள்ளையார் தந்த பாக்கியம்

ரு பெண்ணுக்குச் சிறிய வயதிலிருந்தே பிள்ளையார் என்றால் மிகவும் பிரியம் மரக்கட்டையினால் செய்த பிள்ளையாரை வாங்கி அதற்கு மலர்களைப் போட்டுப் பூசை செய்வாள். தான் எதை உண்டாலும் அந்தப் பிள்ளையாருக்குக் காட்டித் தான் சாப்பிடுவாள். அவளுக்குத் திருமணத்திற்கு ஏற்ற வயது வந்தது. ஒரு நல்லப் பிள்ளையாகப் பார்த்து அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.