பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மரம் இருப்பதைக் கண்டாள். “இரவு நேரத்தை இதன் மேல் ஏறிக் கழித்து விடலாம். காலையில் எழுந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்” என்று எண்ணி அதன் மேல் மெல்ல ஏறினாள். ஒரு கிளையில் சாய்ந்து கொண்டு, கொம்பு ஒன்றைக் கையால் இறுகப் பிடித்துக் கொண்டிருந்தாள். மற்றொரு கையால் பிள்ளையாரைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த இரவு வேளையில் சில திருடர்கள் தாங்கள் திருடிக் கொண்டு வந்திருந்த பணத்தையும், நகைகளையும் அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள், மரத்தின் மேலிருந்த பெண் சிறிது தூக்க மயக்கத்தில் தன் கையில் பிடித்திருந்த பிள்ளையாரை நழுவ விட்டு விட்டாள். அது பொத்தென்று திருடர்களுக்கு நடுவில் விழுந்தது. அதைக் கண்டு அந்தத் திருடர்கள் பயந்து போய், “யாரோ இங்கே மனிதர்கள் இருக்கிறார்கள். நம்மைக் கண்டு பிடித்து விடுவார்கள்” என்று சொல்லி, பணத்தையும் நகைகளையும் அப்படியே போட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

விடிந்த பிறகு அந்தப் பெண் கீழே இறங்கி வந்தாள். தன்னுடைய பிள்ளையாரும், அவருக்கு அருகில் நகையும் பணமும் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தாள். எல்லாவற்றையும் வாரி