பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56

கோபம் நீங்கி விட்டது. பிள்ளையாரின் பெருமைகளை உணர்ந்து கொண்டாள். “நீ இந்தப் பிள்ளையாரோடு சுகமாக வாழ்ந்திரு இவரருளால் உனக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கட்டும்” என்றாள். அது முதல் அந்தப் பெண் அங்கே ஆனந்தமாக வாழ்ந்து வந்தாள்.12. சும்மா இருக்கிற சாமியார்

ரு கோவிலில் ஒரு புதிய தர்மகர்த்தா வந்து சேர்ந்தார். பழம் பெருச்சாளிகளைப் போக்கி விட்டு ஆற்றல் உள்ள புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணத்தோடு அவர் வேலையை ஒப்புக் கொண்டார். பழைய கணக்குகளை வருவித்துப் பார்த்தார். கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதங்களை எப்படி எப்படி விநியோகம் செய்கிறார்கள் என்பதை அறிய, அதற்குரிய கணக்குப் புத்தகத்தை எடுத்துக் கவனித்துப் பார்த்தார். கண்ணை ஓட்டி வருகையில் ஒரு வரியிலே அவருடைய பார்வை நின்று விட்டது. “இது என்ன அக்கிரமம்” என்று அவர் வாய் முணுமுணுத்தது, “சும்மா இருக்கிற சாமியாருக்கு ஒரு பட்டை” என்று அங்கே இருந்தது. “வேலைபுசெய்கிறவர்களுக்குக்