பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
61

கஞ்சன், “இங்கே என்ன பிள்ளையில்லாச் சொத்தா கொட்டிக் கிடக்கிறது? நான் ஒரு தம்படியும் தர மாட்டேன்” என்று முகத்திலடித்தாற்போல் சொன்னான்.

தொண்டர் அதை கேட்டுத் திரும்பிப் போகவில்லை “ஐயா, ஒரு சமாசாரம். தயவு செய்து பொறுமையாகக் கேளுங்கள் நாளைக்கு ஒரு சபையைக் கூட்டப் போகிறேன் அதற்கு நீங்களும் வாருங்கள். பணம் கொடுத்தவர்களுடைய பெயர்களை எல்லாம் சொல்லுவேன். நீங்கள் ஓர் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அதைச் சபையோரிடம் காட்டி நீங்கள் தந்ததாகச் சொல்லிப் பாராட்டுவேன்” என்றார்.

அதற்கு அந்தக் கஞ்சன் இடையில் குறிக்கிட்டு, “நான் ஆயிரம் ரூபாய் தரப் போவதில்லை உனக்கு வேறு வேலை இல்லையா? இந்த இடத்தை விட்டு உடனே ஓடிப்போ” என்றான்.

அந்தத் தொண்டர் அவன் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து “ஐயா, நான் ஒன்று சொல்கிறேன் பொறுமையாகக் கேளுங்கள். நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாயை மறுநாளே உங்களிடம் திருப்பித்தந்து விடுகிறேன். அந்த ஆயிரம் ரூபாயைச் சபையோர் முன் காட்டினால் பலர் நிதியுதவி செய்ய முன் வருவார்கள்” என்றார். -