பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62

அந்த லோபி சிறிது யோசித்தான். “நீ திருப்பித் தருவாய் என்பது என்ன நிச்சயம்?” என்றான். என் தலைமேல் ஆணையாகவும், நான்கட்டும் கோயிலுள்ள சாமியின் மேல் ஆணையாகவும் கூறுகிறேன். நிச்சயமாக உங்கள் பணத்தை திருப்பித் தந்து விடுகிறேன். தாங்களும் தயவு செய்து நாளை நடக்கும் கூட்டத்திற்கு வர வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அந்தக் கஞ்சன் சிறிது நேரம் தயங்கினாலும் அப்பால் சிறிது தெளிவு பெற்று ஆயிரம் ரூபாயைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தான்.


கிழவியின் தந்திரம்.pdf


அந்தத் தொண்டர் அதை வாங்கிக் கொண்டு மறு முறை அவருக்கு நன்றி கூறிவிட்டு தவறாமல்