பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அளவேயில்லை. என்னுடைய திருமணத்தின் பொழுதுகூட நான் இத்துணை மகிழ்ச்சி அடைந்தது இல்லை. ‘கொடுப்பதனால் இன்பம் உண்டாகும்’ என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன். அதற்காக மற்றோர் ஆயிரம் ரூபாயைக் கொடுத்தேன்” என்றான்,தொண்டர் அதைப் பெற்றுக் கொண்டு, அவனிடம் விடை பெற்றுச் சென்றார்.

 “ஈத்துவக்கும் இன்பம் அறியாகொல் தம் உடைமை
   வைத்து இழக்கும் வண்கணவர்”,

(திருக்குறள்)


14. கண்ணன் செய்த தந்திரம்

கத நாட்டைப் பிருகத்ரதன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் மிகவும் கொடியவன். அவனுக்குப் பல காலம் மகவு ஒன்றும் இன்றி வாடி ஒருமுனிவனைப் பணிந்துபிள்ளை வரம் கேட்டான். அந்த முனிவன் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து அதை அவன் மனைவிக்கு அளிக்குபடிக் கூறினான். பிருகத்ரதன் அதனைப் பெற்றுச் சென்று தன் மனைவிமார் இருவரிடமும் அளித்தான். இருவரும் பாதிப்பாதியாக உண்டனர். அதனால் குழந்தையின் பாதியை ஒருத்தியும்,