பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

மற்றொரு பாதியை மற்றொருத்தியும் ஈனவே “இது ஏதோ உற்பாதம்” என்று அஞ்சிய மகத வேந்தன் அந்த இரண்டு பாதிகளையும் தன் நகருக்கு வெளியே எறியுமாறு செய்து விட்டான்.

அன்று இரவு மாமிசம் தின்னும் சரை என்னும் அரக்கி ஒருத்தி மதில் வாயிலிலே உலாவிய போது, அந்தப் பிளவுகளைக் கண்டு இரண்டையும். ஒன்றாகப் பொருத்திப் பார்த்தாள். பொருத்தின மாத்திரத்தில் இரண்டும் ஒன்றுபட்டு உயிரோடு குழந்தையாகி விளையாடத் தொடங்கவே, அரக்கி அதனை அரசனிடம் அளித்து, “சரை என்ற என்னால் பொருத்தப் பட்டமையால் சராசந்தன் என்னும் பெயரிட்டு வழங்குவாயாக” என்று கூறிச் சென்றாள். அது முதல் அந்தக் குழந்தைக்குச் சராசந்தன் என்று பெயரிட்டு வளர்த்தான்.

அந்தச் சராசந்தன் என்பவனும் கொடியவன் அவன் உலகத்து அரசர் எண்ணாயிரம் பேரைப்பசுவாகக் கொண்டு நரமேதம் செய்ய வேண்டும் என்ற ஆசையினால் கைப்பட்ட அரசர்களை எல்லாம் பற்றிச் சிறை வைத்தான். அதனால் உலகத்தில் உள்ளவர்கள் எவரும் அவன் பேரைச் சொல்லவே அஞ்சுவர்.. ஒரு சமயம் தரும்புத்திரர் இராசசூய யாகம் செய்ய எண்ணிக் கண்ணபிரான் முதலியவர்களோடு ஆலோசனை செய்தார். “உலகத்திலுள்ள மன்னர்களில் பலரைச் சராசந்தன் சிறைப்படுத்தி இருக்கி-