பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




15. பொரி அரிசியின் கதை

ர் ஊரில் ஒரு பொரி அரிசி கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப் பட்டதாம். உருண்டு திரண்டு குண்டாகவும் வெளுப்பாகவும் இருக்கும் தனக்கு அழகான புருஷன் வேண்டும் என்று எண்ணியது. அந்த ஊரை விட்டுப் புறப்பட்டது. அதற்குத் தாயும் இல்லை; தகப்பனும் இல்லை. சின்னச் சின்னக் கையும் காலும் அசைய, அது ஊரைச் சுற்றப் புறப்பட்டது. யாரோ ராஜா சண்டையில் வெற்றி அடைந்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அவனுடன் யானை, குதிரை' ஒட்டகம் முதலிய படைகளும் வந்தன. பொரி அரிசி வந்து கொண்டிருந்தபோது எதிரே அரசனுடைய யானை ஒன்று வந்தது. பொரி அரிசி விசுக் விசுக் கென்று வந்ததை அந்த யானை பார்த்தது. அதற்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

“ஏ பொரி அரிசி, பொரி அரிசி! எங்கே இவ்வளவு உற்சாகமாகப் புறப்பட்டாய்?” என்று அதைப் பார்த்து யானை கேட்டது.

உடனே பொரி அரிசி. “நான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன். அதற்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியது.