பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
70

"அப்படியானால் என்னைக் கல்யாணம் செய்து கொள்ளேன்"என்று யானை கேட்டது.

பொரி அரிசி நிமிர்ந்து யானையை மேலும் கீழும் பார்த்தது யானை மகிழ்ச்சியால் தன் காதுகளை அசைத்தது. அந்தக் காதுகள் முறத்தைப் போல இருந்தன. "ஐயையோ! இதைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் இந்த முறம் இரண்டும் நம்மைப் புடைத்துத் தள்ளி விடுமே!" என்று பொரி அரிசிக்குப் பயம் உண்டாகியது. "ஊஹும். நான் மாட்டேன், உனக்கு காது நன்றாகயில்லை. மடங்கி இருக்கிறது" என்று சொல்லி வேகமாகப் போகத் தொடங்கியது.

பொரி அரிசி வேகமாகப் போய்க் கொண்டுருந்தது. எதிரே ஒரு குதிரை வந்தது. "என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன் என்னுடைய கம்பீரமான நடை யாரிடம் இருக்கிறது?" என்று சொல்லிக் கொண்டே நான்கு முறை டக் டக் என்று குதிரை குறுக்கும் நெடுக்கும் நடந்து காட்டியது.

அது நடக்கும் பொழுது பொரி அரிசிக்கு உலக்கையின் ஞாபகம் வந்து விட்டது "ஐயோ! இதன் காலுக்கு அடியில் நாம் அகப்பட்டுக் கொண்டால் நம்மைப் பொடியாக்கி விடுமே!" என்று பயப்பட்டது.

"ஊஹும். நீ அசிங்கமான பிராணி. குந்தம் தள்ளி" என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப் போய்விட்டது.