பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
71

கொஞ்ச தூரம் போன பிறகு எதிரே ஓட்டகம் ஒன்று தன் தலையை அசைத்து ஆட்டிக் கொண்டே வந்தது. ஒட்டகம் "நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன்! நீ என் முதுகில் ஒய்யாரமாக ஊர்வலம் வரலாம்" என்று ஒட்டகம் சொல்லித் தன் உதட்டை அசைத்தது.

உடம்பெல்லாம் கோணல் மயமாக இருந்த ஒட்டகத்தைப் பொரி அரிசி ஒரு தடவை நிமிர்ந்து பார்த்து "ஐயா! எத்தனை கோணல்! உன்னையும் ஒரு பெண் கல்யாணம் பண்ணிக் கொள்வாளோ!." என்று சொல்லி வேகமாக ஓடிப் போய் விட்டது.

கொஞ்ச தூரம் போனபிறகு எதிரே ஒரு கழுதை வந்தது. பொரி அரிசியைப் பார்த்து "என்னைப் பார், என் வெள்ளி மூக்கைப் பார். உன் அழகுக்கும் என் அழகுக்கும் பொருத்தமாக இருக்கும். என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளேன்" என்று சொல்லி கொண்ணாரம் போட்டுக்குதித்தது. சந்தோஷத்தால் விலுக்கென்று பின்னங் காலால் உதைத்துத் தள்ளியது.

அதைப் பார்த்த பொரி அரிசி, "ஐயோ! நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன். நீ காலை உதறி உதைக்கிறாய்" என்று சொல்லி விட்டு மேலே நடந்து போயிற்று.

அப்போது அங்கே அழகான கொண்டை பள பளக்க வாலும் சிறகும் மினுமினுக்க ஒரு சேவற் கோழி ஒய்யார நடை போட்டு எதிரே வந்து கொண்டிருந்தது. ஆஹா! என்ன அழகு! என்ன