பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கீதை காட்டும் கடவுட் கொள்கை கடவுள் உண்டா இல்லையா என்பது ஆத்திக நாத்திக வாதம் ஆகும். இந்த வாதத்திற்கு முடிவு என்பது கிடையாது. இல்லை என்பவர்கள் எல்லாம் இயற்கை என்று கூறி முடிவு கட்டி விடுவார்கள். உண்டு என்பவர் களோ, ஆக்குவோன் ஒருவன் இல்லாமல் ஆக்கப்படு பொருள் இல்லை என்று கூறி உலகத்தையும், உலகில் உள்ள உயிர் வாழ்வன அல்லன அனைத் தையும் அண்ட கோளங்கள் ஆனைத்தையும் உண்டாக்கி, அவற்றிற்குக் கால வரையரை காட்டிக் கட்டிக் காத்து, இறுதியில் அழித்துத் துடைத்து விளையாடுவது இறைவன் பொழுது போக்கு என்று கூறுவார்கள். கம்பர் உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட் டுடையா ரவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே! என்று கடவுள் வாழ்த்துப் பாடுவார்.