பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுட் கொள்கை I 11 பகவத் கீதையில்தான் தன் பிறப்புக்களைப் பற்றி அறிந்தவன் என்று கூறிக் கொள்ளும் கிருஷ்ணன் ஓர் இடத்தில் கூட நான் மீனாகப் பிறந்திருக்கிறேன், ஆமையாய்ப் பிறந்திருக்கிறேன் பன்றியாகப் பிறந்திருக்கிறேன் மனிதச் சிம்மமாகப் பிறந்திருக்கிறேன் குள்ள வடிவோடு பிறந்திருக்கிறேன் பரசுராமனாகவும் இராமனாகவும் பலராமனாகவும் ஏற்கனவே பிறந்திருக்கிறேன் என்று குறிப்பிட வில்லை. இதிலிருந்து இந்தப் பிறப்புக்களைப் பற்றி அவன் அறிந்திருக்க நியாயமில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு சுலோகத்தில் ஓங்காரம் நான் ரிக் நான் சாமம் நான் யஜூர் நான் என்று தானே மூன்று வேதங்களாகவும் இருப்பதாகக் கூறுகிறான்.