பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 கீதை காட்டும் பாதை அனைவரும் காணத் தோன்றாமல், அர்ச்சுனனுக்கு மட்டும் ஞானக்கண் கொடுத்து இரகசியமாகக் காட்டிய காட்சியின் பொருள் என்ன? அர்ச்சுனனைப் போல் மற்றவர்கள் தன்னை நம்ப மாட்டார்கள் என்றா? தன்னை எதிர்ப்பார்கள் என்றா? தன்னை அடைய மாட்டார்கள் என்றா? இப்படிக் கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டே போகலாம். இன்றும் சர்க்கரை வரவழைப்பவர்களும், விபூதி வரவழைப்பவர்களும், சில அதிசயங்களைச் செய்து காட்டுபவர்களும், தாங்கள் மற்ற மாந்தரைப் போல், விதி வந்தால் செத்தொழிய வேண்டிய - சாவை எதிர்த்து நிற்க முடியாத - தங்கள் ஆற்றல்களாலும், சாகசங்களாலும் மரணத்தை வெல்ல முடியாத சாதாரண மனிதப் பிறவிகளே என்று கருத்தில் கொள்ளாமல், பிறர் பிறரெல்லாம் தங்கள் காலடி யில் விழுந்து வணங்க அதைப் பார்த்துக் கொண்டு பதறாமல், அற்பப் பெருமையால் ஆனந்தப்பட்டுக் கொண்டு நிற்கும் சிறு புல்லை நிகர்த்தவர்கள் எல்லாம், பிறர் முன் தாங்கள் பெரிய கடவுள்களாகக் காட்டிக் கொள்ளும் ஏமாற்று வேலைக்கு மூல காரணமாய் இருப்பது தவிர - எடுத்துக் காட்டாய் இருப்பது தவிர - வழிகாட்டியாய் நிற்பது தவிர கீதைக் கண்ணன் சாதித்தது ஒன்றும் இல்லை. அன்று கண்ணன்; இன்று இவர்கள்! அவ்வளவு தான்!