பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கீதை காட்டும் பாதை இதுவரை கீதையில் கண்ணன் அர்ச்சுனனுக்குக் காட்டிய வழியைப் பகுதி பகுதியாக உற்று நோக்கினோம். ஒட்டு மொத்தமாக - இதுவரை நாம் பார்த்த செய்திகளைத் தொகுத்துப் பார்ப்ப தாக அமைகிறது. இக்கட்டுரை. மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு கீதை கூறும் பொன்மொழிகள் வேதாந்தமாகவும், தத்துவக் கருத்துப் போலவும், சிறந்த நீதி மொழியாகவும், மாந்தர் குலத்தைத் திருத்த வந்த புதுக் கருத்துப் போலவும் தோற்றமளிக்கும். கூர்ந்து சிந்தித்துப் பார்த்தால், மாந்தர் குலத்தைக் கூறு கூறாக்கி, ஆண்டான் அடிமை என்ற வேறுபாட்டை, இறைவன் பெயரால் நிரந்தரமாக நிலைநாட்டுவதற்கு விரிக்கப்பட்ட ஒரு வலையாக அது காணப்படுவதை உணரலாம். 垒一器