பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ைேத காட்டும் பாதை 123 அறிவுக்குப் புறம்பான வாதங்களை முன் வைத்து, விசுவருப தரிசனம் என்ற மாயா சாலத்தைக் காட்டி, அர்ச்சுனனைப் பயமுறுத்தி, பக்திமானாக்கிக் கடைசியில் கடமையைச் செய் என்னை அடையலாம் என்று சொல்லி முடிக்கிறான். தொடக்க முதல் முடிவுவரை கூறும் கருத்துக் களிலே தெளிவில்லை. எளிதில் தெளியக் கூடாது என்பதற்காகவே பின்னிப் புனையப்பட்ட கருத்துக் களாகவே இருக்கின்றன. தன்னைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி அர்ச்சுனனை அணியப்படுத்துவதற்குப் பெரும்பாடு பட்டிருக்கிறான் கண்ணன். தன்னைக் கடவுளாக - பரம் பொருளாகக் கூறிக் கொள்வதிலும் கண்ணனிடம் ஓர் உறுதியான கொள்கையில்லை. முதலில் தன் கடவுள் தன்மையை வெளிப் படுத்தும்போது, அர்ச்சுனனுக்கும் தனக்கும், அதாவது சாதாரண மனிதனுக்கும் தேவனுக்கும், பிறப்புக்கள் அடுத்தடுத்து வருகின்றன என்றும், மனிதனுக்குத் தன் பிறப்பை யறிந்துகொள்ள முடியாதென்றும், தேவன் அறிந்திருக்கிறான் என்றும் கூறுகிறான்.