பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 கீதை காட்டும் பாதை அடைகிறார்கள். என்னை ஆராதிப்போர் என்னை அடைகிறார்கள் என்று குறிப்பிடும்போது, கண்ணனும் ஒரு தேவன், - தேவர்க்குள் ஒருவன் என்ற எண்ணம் தான் தோன்றுகிறது. ஏழாவது அத்தியாயமாகிய ஞான யோகத்தில், தான் தான் பரமாத்மா, பெருங்கடவுள் என்று அறிவிக்கத் தொடங்குகிறான். அதன் பிறகு பலவகைகளில் தான் தனிப் பெருங்கடவுள் என்பதைப் புலப்படுத்திக் கொண்டு வருகிறான். தானே எல்லா உயிர்களையும் படைப்பதாகக் கூறுகிறான். முதலில் ஆத்மாக்களுக்கு அழிவில்லை என்று சொன்னபோது, அவற்றிற்குப் பிறப்பும் இல்லை என்று தான் பொருள் படுகிறது. ஆத்மாக்கள் நிலையாக உள்ளவை என்றும், உடல்கள் தான் பிறந்து பிறந்து அழிகின்றன என்றும் கூறியவன், இப்போது அவற்றின் தனித் தன்மையை மறந்து, தானே எல்லாவற்றையும் படைப்பதாகக் கூறுகிறான். இவ்வுலகில் எல்லாம் தானே என்றும், எல்லாம் தன்னால் ஆக்கப்பட்டவை என்றும், எங்கும் தான் இருப்பதாகவும்,அறிவிக்கிறான்.