பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கீதை காட்டும் பாதை வேதங்களில் ரிக் தான் முதன்மையான வேதம். ஆனால் அவன் தன்னை சாமம் என்று கூறிக் கொள்கிறான். உலகத்தார் பீடை என்று ஒதுக்கிய மார்கழி யைச் சிறந்ததாகக் கருதி, மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லிக் கொள்கிறான். இன்னும் கோமாளித் தனமாக வஞ்சகரிடையே நான் சூது என்றும் கூறுகிறான். மரணம் நான், பிறப்பு நான் என்று எல்லாமாம் தன்மையையும் கூறுகிறான். எது எது பெருமையுடையது எது எது அழகுடையது எது எது வலிமையுடையது அதுவெல்லாம் என் ஒளியின் அம்சம் என்கிறான். மற்றவையெல்லாம் என்ன என்பதற்கு விளக்கம் இல்லை. நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனும் இல்லை, நண்பனும் இல்லை என்று பொது நிலையில் கூறிக்கொள்ளும் கண்ணன் தன்னை யார் யார் தொழமாட்டார்கள் என்று கூறும் போது தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப் பட்டோர், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர் ஆகியோர் என்னைச் சரண்புகார் என்று (கீதை 15) வெறுப்பைக்